ADDED : செப் 21, 2026 06:19 AM
அ நிறம் | அளவு
கரூர்:வேலாயுதம்பாளையம் அருகே, தனியார் சர்க்கரை ஆலையில் மயங்கி விழுந்த டிரைவர் உயிரிழந்தார்.
தர்மபுரி
மாவட்டம், வெள்ளகவுண்டம்பாளை யம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர், 43;
டிரைவர். இவர், நேற்று முன்தினம், கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம்
அருகே, செம்படாம்பாளையத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு, லாரியை
ஓட்டிக்கொண்டு வந்தார். பின், லாரியின் மேல் பகுதியில் உள்ள தார் பாயை
பாஸ்கர் எடுக்க முயன்றபோது, தவறி கீழே விழுந்தார். அப்போது, அருகில்
இருந்தவர்கள் பாஸ்கரை, ஆம்புலன்ஸ் வாகனம் மூலம், கரூர் அரசு மருத்துவ
கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், செல்லும் வழியில்
பாஸ்கர் உயிரிழந்தார். வேலாயுதம்பாளையம் போலீசார்
விசாரிக்கின்றனர்.
