ADDED : செப் 21, 2026 06:19 AM
அ நிறம் | அளவு
குளித்தலை:குளித்தலை
அடுத்த கல்லடை பஞ்., ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் லதா, 32;
இடைப்பட்டி அங்கன்வாடி பள்ளியில் சமையல் உதவியாளர்.
இவரது கணவர்
மோகன்தாஸ், 35, வாய் பேச முடியாது, காது கேட்காத மாற்றுத்திறனாளி.
இவர்களுக்கு, கடந்த, 12 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, இரண்டு ஆண்
குழந்தைகள் உள்ளனர். கடந்த, 19 காலை, 7:30 மணிக்கு, மோகன்தாஸ்
தோட்டத்தில் பூ பறிக்க கூலி ஆட்களை அழைத்துவருவதாக கூறி
சென்றுள்ளார். ஆனால், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவர் குறித்து எந்த
தகவலும் கிடைக்காததால், லதா அளித்த புகார்படி, தோகைமலை போலீசார்,
மோகன்தாஸை தேடி வருகின்றனர்.
