/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் சுற்று வட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் கோடை மழை
/
கரூர் சுற்று வட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் கோடை மழை
கரூர் சுற்று வட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் கோடை மழை
கரூர் சுற்று வட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் கோடை மழை
ADDED : மே 10, 2024 07:26 AM
கரூர் : கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று இரவு திடீரென குளிர்ந்த காற்றுடன் கோடை மழை பெய்தது.கோடைகாலத்தை ஒட்டி, கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக, 100 முதல், 111 டிகிரி வரை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இதனால், இரவு நேரத்தில் ஏற்படும் புழுக்கம் காரணமாக, பொதுமக்கள் துாங்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், வானம் மேகமூட்டமாக இருந்தது.அதை தொடர்ந்து, சிறிது நேரத்தில் திடீரென மழை பெய்தது. கரூர் டவுன், பசுபதிபாளையம், திருமாநிலையூர், வெங்கமேடு, தான்தோன்றிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன், விட்டு விட்டு இடி, மின்னலுடன் மழை பெய்தது.கோடை வெப்பத்தால் மக்கள், கால்நடைகள் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை, கோடை மழை பெய்தது பொதுமக்களுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது.