ADDED : மே 31, 2025 06:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி கிளை நுாலகத்தில், பள்ளி மாணவர்களுக்கு கோடைகால பயிற்சியாக கணினி மற்றும் ஓவிய பயிற்சி முகாம் நடைபெற்றது.
தமிழக அரசு நுாலகத்துறை மற்றும் கரூர் மாவட்ட நுாலகம் சார்பில், அரவக்குறிச்சி கிளை நுாலகத்தில் மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில், 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அடிப்படை கணினி பயிற்சி மற்றும் ஓவிய பயிற்சி வழங்கப்பட்டது.இதில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று பயிற்சி பெற்றனர். பயிற்சியில் ஈடுபட்ட மாணவர்களுக்கு, நுாலக உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. பயிற்சிக்கான ஏற்பாடுகளையும், மாணவர்களுக்கு பயிற்சியையும் கிளை நுாலகர் இளைய சபரி செய்திருந்தார்.