/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கேபிள் 'டிவி' ஆப்ரேட்டர்களுக்கு எச்.டி., செட்டாப் பாக்ஸ் வழங்கல்
/
கேபிள் 'டிவி' ஆப்ரேட்டர்களுக்கு எச்.டி., செட்டாப் பாக்ஸ் வழங்கல்
கேபிள் 'டிவி' ஆப்ரேட்டர்களுக்கு எச்.டி., செட்டாப் பாக்ஸ் வழங்கல்
கேபிள் 'டிவி' ஆப்ரேட்டர்களுக்கு எச்.டி., செட்டாப் பாக்ஸ் வழங்கல்
ADDED : டிச 26, 2024 03:05 AM
கரூர்: குளித்தலை, கிருஷ்ணராயபுரத்தில் அரசு கேபிள் 'டிவி' ஆப்ரேட்-டர்களுக்கு எச்.டி., செட்டாப் பாக்ஸ் வழங்கப்பட்டது.
தனியார் நிறுவனங்களை விட குறைந்த கட்டணம், துல்லியமான படக்காட்சி மற்றும் எச்.டி.எம்.ஐ., கேபிள் மூலம் அனைத்து புதிய மாடல் 'டிவி'க்களிலும் இணைக்கும் வசதி காரணமாக, பழைய எஸ்.டி., பாக்ஸிற்கு பதிலாக, எச்.டி., செட்டாப் பாக்ஸ்களை பயன்படுத்த மக்கள் ஆர்வமாக உள்ளனர். இதையடுத்து, உயர் தொழில்நுட்பத்துடன் அரசு கேபிள் 'டிவி'க்கு எச்.டி., செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி கரூர் மாவட்-டத்தில், 94 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேபிள் 'டிவி' இணைப்-புகள் உள்ளன. அதில் முதல்கட்டமாக, 9,000 செட்டாப் பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக. அரசு கேபிள் 'டிவி' ஆப்ரேட்-டர்கள் கட்டணம் செலுத்தி, எச்.டி., செட்டாப் பாக்ஸ்களை பதிவு செய்ய துவங்கியுள்ளனர். ஆன்லைனில் பதிவு செய்த ஆப்ரேட்-டர்களுக்கு, எச்.டி., செட்டாப் பாக்ஸ் வழங்கும் பணி துவங்கியுள்-ளது. குளித்தலை, காவிரி நகரில் உள்ள தமிழ்நாடு அரசு கேபிள் 'டிவி' நிறுவன அலுவலகத்தில், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் ஆப்ரேட்டர்களுக்கு எச்.டி., செட்டாப் பாக்ஸ் வழங்கப்பட்டது. அரசு கேபிள் 'டிவி' துணை மேலாளர் விஜயா வழங்கினார். எச்.டி., பாக்ஸ் தேவைப்படும் ஆப்பரேட்டர்கள், https://www.tactv.in என்ற தளத்தில், கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.