ADDED : நவ 18, 2025 01:25 AM
கரூர்,கரூர் தனியார் கல்லுாரியில், தமிழ் கனவு நிகழ்ச்சி நாளை நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
கரூர் மாவட்டத்தில், வெண்ணைமலை கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நாளை (19ம்தேதி) காலை, 9:00 மணியளவில் தமிழ் கனவு நிகழ்ச்சி நடக்கிறது.
திரைப்பாடலில் அகமும் புறமும் என்ற தலைப்பின் கீழ், திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் யுகபாரதி பேசுகிறார்.மேலும், கரூர் ஜெயராம் கல்லுாரியில் 'காலத்தை வென்ற கவிஞர்கள்' என்ற தலைப்பின் கீழ் கவிஞர் நெல்லை ஜெயந்தா பேசுகிறார். கல்லுாரிகளில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் புத்தகங்கள், நான் முதல்வன் திட்டம் சார்ந்த கையேடுகள், வேலை வாய்ப்பு அலுவலக வழிகாட்டல், உயர்கல்வி வழிகாட்டுதல், வங்கி கடன் பெறுவதற்கான வழிகாட்டுதல், மாவட்ட தொழில் மைய வழிகாட்டல், மகளிர் சுய உதவிக்குழு அரங்குகள் போன்ற பல்வேறு துறை சார்ந்த அரங்குகள் அமைக்கப்பட
உள்ளன. இவ்வாறு கூறியுள்ளார்.

