/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'ஆம்னி பஸ் பிரச்னையை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை'
/
'ஆம்னி பஸ் பிரச்னையை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை'
ADDED : நவ 14, 2025 01:32 AM
கரூர், கரூர் கலெக்டர் தங்கவேலுவிடம், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் (எஸ்.ஐ.ஆர்.,) தொடர்பாக, அ.தி.மு.க., மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் மனு அளித்தார்.
அப்போது அவர், நிருபர்களிடம் கூறியதாவது:கரூர் மாவட்டத்தில், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு எஸ்.ஐ.ஆர்., பற்றி முழு விபரம் தெரியவில்லை. சில ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தை, தி.மு.க.,வினர் வினியோகம் செய்து வருகின்றனர். இப்படி இருந்தால் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் எப்படி சரியாக நடக்கும்.
கடந்த 4 நாட்களாக வெளி மாநில ஆம்னி பஸ்கள் தொடர்பாக பிரச்னை நீடித்து வருகிறது. இந்த பிரச்னை குறித்து தமிழக அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது. அந்தந்த மாநில எல்லைகளில் ஆம்னி பஸ்கள் நிறுத்தப்படுகின்றன.
ஆல் இந்தியா டூரிஸ்ட் பர்மிட் என, 90 ஆயிரம் ரூபாய் ஆண்டு தோறும் செலுத்துகின்றனர். மேலும், மாநில பரிமிட்டுக்கு கட்டணம் செலுத்துகின்றனர்.
தற்போது அனைத்து மாநிலங்களும், தனியாக கட்டணம் வசூல் செய்து வருகிறது. இதனால், இரண்டு மாநிலத்தில் கட்டணம் செலுத்தி பஸ் இயக்க முடியவில்லை என, உரிமையாளர்கள் கூறுகின்றனர். எனவே, நான்கு மாநில அரசுடன் பேசி, இதற்கான தீர்வு ஏற்படுத்த வேண்டும். சபரிமலை சீசன் தொடங்கிவுள்ளதால், தமிழக பக்தர்கள் பாதிக்கப்படுவர்.
இவ்வாறு, அவர் கூறினார்.
x

