/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் சாக்கடை வசதியின்றி கழிவுநீர் தேக்கம்

ADDED : நவ 14, 2025 01:31 AM
கரூர், பி.வெள்ளாளபட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில், சாக்கடை வசதியின்றி கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
கரூர் அருகே புலியூர் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட, பி.வெள்ளாளபட்டியில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில், 288 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் குடிநீர், கழிவுநீர் செல்ல சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை. அங்கு வசிக்கும் பொதுமக்கள் தினமும் அவதிக்குள்ளாகின்றனர்.
கழிவுநீர் செல்ல சாக்கடை வசதி இல்லாததால், குடியிருப்பு பகுதிகளில் பள்ளமாக உள்ள இடங்களில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அப்பகுதியிலேயே கழிவுநீர் தேங்கி நிற்பதால், கொசு தொல்லையால் அவதிப்படுகின்றனர். இது குறித்து பல முறை கலெக்டரிடம் மனுக்கள் அளித்தும் எந்த பலனும் இல்லை என, இப்பகுதி மக்கள் தெரிவித்தனர். எனவே, அடிப்படை வசதிகளை செய்து தர மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.