sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

டாஸ்மாக் கடைகளில் 24 மணி நேரமும் மது விற்பனை: சட்டம் ஒழுங்கு சீர்கேட்டில் கரூர் பஸ் ஸ்டாண்ட்

/

டாஸ்மாக் கடைகளில் 24 மணி நேரமும் மது விற்பனை: சட்டம் ஒழுங்கு சீர்கேட்டில் கரூர் பஸ் ஸ்டாண்ட்

டாஸ்மாக் கடைகளில் 24 மணி நேரமும் மது விற்பனை: சட்டம் ஒழுங்கு சீர்கேட்டில் கரூர் பஸ் ஸ்டாண்ட்

டாஸ்மாக் கடைகளில் 24 மணி நேரமும் மது விற்பனை: சட்டம் ஒழுங்கு சீர்கேட்டில் கரூர் பஸ் ஸ்டாண்ட்


ADDED : ஏப் 29, 2024 07:15 AM

Google News

ADDED : ஏப் 29, 2024 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : கரூர் பஸ் ஸ்டாண்டை சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகளில், 24 மணி நேரமும் மது விற்பனை கன ஜோராக நடக்கிறது. சில திருநங்கைகளின் வழிப்பறியால் நாள்தோறும் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது.

தென் மாநிலங்களின் நுழைவு வாயிலாக உள்ள, 'ஏ' கிரேடு அந்தஸ்து பெற்ற கரூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து, தமிழகம் மட்டுமல்ல தென் மாநிலத்தில் உள்ள, முக்கிய பகுதிகளுக்கும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால், தொழில் நகரான கரூர் பஸ் ஸ்டாண்ட், 24 மணி நேரமும் பஸ்கள் வந்து செல்கின்றன. எந்நேரமும் பயணிகளும் கரூர் பஸ் ஸ்டாண்டில் இருப்பர்.

இந்நிலையில், கரூர் பஸ் ஸ்டாண்டை சுற்றி, ஐந்து டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு, 24 மணி நேரமும் மது விற்பனை கன ஜோராக நடக்கிறது. அதை, கரூர் சட்டம் - ஒழுங்கு போலீசாரோ, மதுவிலக்கு போலீசாரோ, மாவட்ட தனிப்பிரிவு போலீசாரோ, குற்றப்புலனாய்வு பிரிவு (எஸ்.பி., சி.ஐ.டி., )போலீசாரோ கண்டுகொள்வது இல்லை. இதனால், கரூர் பஸ் ஸ்டாண்டை சுற்றி, மது விற்பனை கன ஜோராக இருப்பதால், அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. குறிப்பாக, இரவு நேரத்தில், சமூக விரோத செயல்களின் கூடாரமாக கரூர் பஸ் ஸ்டாண்ட் உள்ளது.

கரூர் பஸ் ஸ்டாண்ட் வெளியில் உள்ள புறக்காவல் நிலையம், பகல் நேரங்களில் பெரும்பாலும் பூட்டியே உள்ளது. இரவு நேரத்திலும், ரோந்து போலீசார் பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு செல்வதே அரிதாக உள்ளது. இதனால், நாள்தோறும் கரூர் பஸ் ஸ்டாண்டில், சட்ட விரோத செயல்கள் அதிகரித்து வருகின்றன.

வழிப்பறியில் திருநங்கைகள்


கரூர் மாவட்டத்தில், 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் உள்ளனர். அதில், சில திருநங்கைகள் வெங்ககல்பட்டி பாலம், சுக்காலியூர் பாலம், திருகாம்புலியூர் பாலம் பகுதிகளில் நின்று கொண்டு, பொதுமக்களிடம் வழிப்பறியில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் கரூர் பஸ் ஸ்டாண்டில், திருநங்கைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.






      Dinamalar
      Follow us