/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
க.பரமத்தி கல் குவாரிபள்ளத்தில் விழுந்த டாரஸ் லாரி டிரைவர் பலி
/
க.பரமத்தி கல் குவாரிபள்ளத்தில் விழுந்த டாரஸ் லாரி டிரைவர் பலி
க.பரமத்தி கல் குவாரிபள்ளத்தில் விழுந்த டாரஸ் லாரி டிரைவர் பலி
க.பரமத்தி கல் குவாரிபள்ளத்தில் விழுந்த டாரஸ் லாரி டிரைவர் பலி
ADDED : ஆக 21, 2024 02:56 AM
கரூர்:க.பரமத்தி அருகே, கல் குவாரி யில் உள்ள பள்ளத்தில் விழுந்த, டாரஸ் லாரி டிரைவர் உயிரிழந்தார்.
நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி ஆயங்குடிபள்ளம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர், 41; லாரி டிரைவர். இவர், கரூர் மாவ ட்டம், க.பரமத்தி அருகே தலையூத்துப்பட்டி பகுதியில் உள்ள, ஸ்ரீ செல்வ விநாயகா புளூ மெட்டல் கல் குவாரியில் கடந்த, ஐந்தாண்டுகளாக டிரைவராக வேலை செய்து வந்தார். நேற்று கல் குவாரியில் உள்ள, 90 அடி பள்ளத்தில் உள்ள பாறைக்குழியில் இருந்து டாரஸ் லாரியில், தண்ணீரை எடு த்துக் கொண்டு, டிரைவர் சுதாகர் மேலே ஓட்டி சென்றுள்ளார். அப்போது, 70 அடிக்கு மேலே சென்ற பிறகு, டிரைவர் சுதாகர், டாரஸ் லாரியில் இருந்து தவறி, கல்குவாரி பள்ளத்தில் விழுந்தார். குவாரியில் இருந்தவர்கள், சுதாகரை மீட்டு கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியிலேயே சுதாகர் உயிரிழந்தார். க.பரமத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.