/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நாளை, நாளை மறுநாள் ஆசிரியர் தகுதி தேர்வு
/
நாளை, நாளை மறுநாள் ஆசிரியர் தகுதி தேர்வு
ADDED : நவ 14, 2025 02:17 AM
கரூர், நாளை, நாளை மறுநாள் ஆசிரியர் தகுதி தேர்வு நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டத்தில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஆசிரியர் தகுதி தேர்வு (டெட் தேர்வு) நாளை, நாளை மறுநாள் (15, 16) நடக்கிறது.
இதில், 5 மையங்களில் நாளையும், 19 தேர்வு மையங்களில் நாளை மறுநாளும் நடக்கிறது. மையங்களில் முறையே, 1,254 மற்றும், 5,228 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வுக்கூட அனுமதி சீட்டு வைத்துள்ளவர்கள் மட்டுமே தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவர்.
தேர்வர்கள் தங்களுக்குரிய தேர்வு நாளன்று காலை, 9:30 மணிக்குள் மையத்தில் இருக்க வேண்டும். நேரம் தவறி காலை, 9:30 மணிக்கு மேல் வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
தேர்வர்கள் தங்கள் புகைப்பட அடையாளத்திற்காக, ஏதாவது ஒரு அசல் அடையாள அட்டையை உடன் வைத்துக்கொள்ள வேண்டும். தேர்வர்கள் எளிதாக தங்களது தேர்வுக் கூடத்திற்கு வந்து செல்ல சிறப்பு பஸ் இயக்கவும், தேர்வு நாளில் தடையில்லா மின்சாரம் வழங்கிடவும் மற்றும் அவசர தேவைக்கான மருத்துவக் குழுக்களை தயார் நிலையில் இருக்கவும் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

