/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆசிரியர்கள், மகளிர் ஊர்நல அலுவலர்கள் சங்க கூட்டம்
/
ஆசிரியர்கள், மகளிர் ஊர்நல அலுவலர்கள் சங்க கூட்டம்
ADDED : நவ 14, 2024 07:15 AM
கரூர்: தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள், மகளிர் ஊர் நல அலுவலர்கள் மேற்பார்வையாளர்கள் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் ஆலோ-சனை கூட்டம் நேற்று நடந்தது.
அதில், தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவித்த பழைய ஓய்வூ-தியம் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு, குடும்ப ஓய்வூதியம் காலதாமதம் இல்லாமல் ஆணை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வரும், 2025 மார்ச் 7ல் சென்னை சமூகநலத்துறை ஆணையாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட் டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா-னங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில தலைவர் சங்கர் பாபு, மாவட்ட செயலாளர் மகாலட்சுமி, பொருளாளர் ராஜேந்திரன் உள்-பட, பலர் பங்கேற்றனர்.