/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மின் கம்பம் சாய்ந்து கோவில் கட்டடம் சேதம்
/
மின் கம்பம் சாய்ந்து கோவில் கட்டடம் சேதம்
ADDED : அக் 13, 2025 02:16 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., மேட்டுமருதுார், நான்காவது வார்டு காளியம்மன் கோவில் அருகே ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர்.
அப்பகுதியில் மின் கம்பம் அமைத்து தெருவிளக்கு பொருத்தப்பட்டுள்ளது. அந்த மின் கம்பத்தின் அடியில் சிமென்ட் பூச்சிகள் பெயர்ந்து, அடிப்பாகம் துருப்பிடித்து ஆபத்தான நிலையில் இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, எதிர்பாராதவிதமாக மின்கம்பம் அடியுடன் உடைந்து கோவிலுக்கு சொந்தமான ஓட்டு கட்டடம் மீது விழுந்து சுவர் சேதமானது. அதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. பொதுமக்கள் அளித்த தகவலை அடுத்து, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.