sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தகரம் இல்லாததால் 'சீல்' வைக்க முடியவில்லை கோவில் செயல் அலுவலரின் அற்புதமான விளக்கம்

/

தகரம் இல்லாததால் 'சீல்' வைக்க முடியவில்லை கோவில் செயல் அலுவலரின் அற்புதமான விளக்கம்

தகரம் இல்லாததால் 'சீல்' வைக்க முடியவில்லை கோவில் செயல் அலுவலரின் அற்புதமான விளக்கம்

தகரம் இல்லாததால் 'சீல்' வைக்க முடியவில்லை கோவில் செயல் அலுவலரின் அற்புதமான விளக்கம்


ADDED : டிச 24, 2024 02:16 AM

Google News

ADDED : டிச 24, 2024 02:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், டிச. 24-

கரூர், வெண்ணைமலை கோவிலுக்கு சொந்தமான கடைகளை, தகரம் இல்லாததால் சீல் வைக்க முடியவில்லை என, கோவில் செயல் அலுவலர் சுகுணா விளக்கம் அளித்துள்ளார்.

கரூர் அருகில், வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான, 507 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் வீடுகள், வணிக நிறுவனங்கள் கட்டப்பட்டு, பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்த இடங்களை மீட்க கோரி, உயர்நீதிமன்றம் மதுரை கிளையில், திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்தார். அந்த இடங்களை மீட்க வேண்டும் என, ஹிந்து சமய அறநிலை துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. பின், கோவில் நிலங்களை மீட்க, நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில், ராதா

கிருஷ்ணன் மனு தாக்கல் செய்தார். நீதிமன்றம் உத்தரவுபடி, இடங்களை மீட்கும் பணியில் அறநிலையத்துறை அதிகாரிகள் மந்த கதியில் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வெண்ணைமலை கோவில் செயல் அலுவலர் சுகுணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில், அவமதிப்பு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், கடந்த, 21ல், கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ள வணிக நோக்கில் செயல்படும் கடைகளை, 'சீல்' வைக்க முதல் கட்டமாக திட்டமிடப்பட்டது. அதன்படி, வெண்ணைமலை ஐயப்பன் கோவில் விதியில் இருந்த கடைக்காரர்கள் காலி செய்து விட்டதாகவும், அதில், சில கடைகள் ஷட்டர் கதவுகளை கழற்றி கொண்டு சென்றதாக தெரியவந்தது. முதலில், அந்த கடைகளுக்கு போலீஸ், வருவாய்துறையினர் ஆலோசனை படி சீல் வைக்க முடிவு செய்யப்பட்டது.

அதில், நான்கு கடைகளுக்கு ஷட்டர் கதவு இருந்ததால், சீல் வைக்கப்பட்டது. அருகில், இரண்டு கடைகளை பார்த்த போது, பொருட்களை எடுத்து கொண்டு காலி செய்து விட்டு, ஷட்டர் கதவு கழற்றி சென்று விட்டனர். அந்த கடைகள் தகரம், மரக்கட்டை வைத்து அடைத்து சீல் வைக்கப்பட்டது. அதன்பின் சென்ற இரண்டு கடைகளின் ஷட்டர் கதவுகள் கழற்றி விட்டு சென்றுள்ளனர். அந்த கடைகளுக்கு சீல் வைக்க முயன்ற போது, தகரம் உடனடியாக கிடைக்கவில்லை. மேலும் பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக, அந்த கடைகளுக்கு சீல் வைக்க முடியவில்லை. அப்போது மண்மங்கலம் தாசில்தார் குணசேகரன், தனி தாசில்தார் ராஜாமணி உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இவ்வாறு, அதில், கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us