/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரும்பு விவசாயிகளுக்கு காப்பீடு தொகை கலெக்டரிடம் மனு அளித்த கொ.ம.தே.க.,

ADDED : டிச 24, 2024 02:02 AM
கரூர், டிச. 24-
கரும்பு விவசாயிகளுக்கு, காப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கொ.ம.தே.க., மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமையில், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
அதில், கூறியிருப்பதாவது:
கரூர் மாவட்ட விவசாயிகள், புகழூர் தனியார் சர்க்கரை ஆலையில் பதிவு செய்து விட்டு, கரும்பு பயிரிட்டு வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளில், மஞ்சள் இலை நோயால் கரும்பு சாகுபடி பாதிக்கப்பட்டு வருகிறது. ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம், 40 முதல், 50 டன் கரும்பு அறுவடை செய்யப்படும். ஆனால், நோய் தாக்கத்தால் மிக குறைந்த அளவில் கரும்பு மகசூல் இருக்கிறது. பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு, தனியார் ஆலை சார்பில் பயிர் காப்பீடு செய்யப்படுகிறது. ஆனால், மகசூல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையான காப்பீடு தொகையை ஆலை நிர்வாகம் வழங்குவதில்லை. ஒரு ஏக்கருக்கு, 50 ஆயிரம் ரூபாய் காப்பீடு தொகையும், ஒரு ஏக்கருக்கு, 25 ஆயிரம் ரூபாய் காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.