/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சட்டசபை தேர்தலுக்கு அடித்தளமாக விழா அமையும்: செய்தித்துறை அமைச்சர்
/
சட்டசபை தேர்தலுக்கு அடித்தளமாக விழா அமையும்: செய்தித்துறை அமைச்சர்
சட்டசபை தேர்தலுக்கு அடித்தளமாக விழா அமையும்: செய்தித்துறை அமைச்சர்
சட்டசபை தேர்தலுக்கு அடித்தளமாக விழா அமையும்: செய்தித்துறை அமைச்சர்
ADDED : செப் 15, 2025 01:58 AM
கரூர்:''வரும் சட்டசபை தேர்தலுக்கு அடித்தளமாக, இந்த விழா அமையும்,'' என, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.
கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கோடங்கிபட்டி பிரிவு அருகே, வரும், 17ல் தி.மு.க., சார்பில் முப்பெரும் விழா நடக்கிறது. இதில், தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உட்பட அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இந்நிலையில், முப்பெரும் விழா நடக்கும் மேடை பணிகளை, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், தி.மு.க., மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்போது, அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது: முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள், ஈ.வெ.ரா., பிறந்த நாள், தி.மு.க., தொடக்க நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக, செப்., 17ல் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு, கொங்கு மண்டல பகுதியாக கரூரில், தி.மு.க., முப்பெரும் விழா நடப்பது மகிழ்ச்சியளிக்கிறது. வரும் சட்டசபை தேர்தலுக்கு அடித்தளமாக, இந்த விழா அமையும். அதில், முதல்வர் ஸ்டாலின், பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பு உள்ளது.
இவ்வா அவர் கூறினார்.
அப்போது, அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ, துணை மேயர் தாரணி சரவணன், மண்டல தலைவர் கனகராஜ், கரூர் மாநகர பகுதி செயலர் ஜோதிபாசு உள்பட பலர் உடனிருந்தனர்.