/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆதி திராவிடர் விடுதி முன்புறம்கழிவுநீர் தேக்கத்தால் அவதி
/
ஆதி திராவிடர் விடுதி முன்புறம்கழிவுநீர் தேக்கத்தால் அவதி
ஆதி திராவிடர் விடுதி முன்புறம்கழிவுநீர் தேக்கத்தால் அவதி
ஆதி திராவிடர் விடுதி முன்புறம்கழிவுநீர் தேக்கத்தால் அவதி
ADDED : ஜன 04, 2025 01:15 AM
கரூர், ஜன. 4-
ஆதி திராவிடர் விடுதி முன்புறம் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற வேண்டும்.
வெள்ளியணை பஞ்சாயத்து அலுவலகம் அருகில், ஆதி திராவிடர் விடுதி செயல்பட்டு வருகிறது. வெளியூர்களை சேர்ந்த மாணவர்கள், இங்கு தங்கி படித்து வருகின்றனர்.
விடுதி முன் போதிய பராமரிப்பு இல்லாததால், சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. விடுதிக்கு முன் முட்செடிகள் அதிகளவு வளர்ந்துள்ளன. விடுதிக்கு முன்புறம், சாக்கடை கழிவுநீர் குட்டை போல தேங்கியுள்ளது. இதனால், மாணவர்கள் தினமும் வேதனைப் படுகின்றனர்.
தேங்கி கிடக்கும் சாக்கடை நீரில், கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. எனவே, தேங்கியுள்ள சாக்கடை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.