/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் அருகே காவிரியாற்று பாலத்தின் தரைத்தளம் சேதம்
/
கரூர் அருகே காவிரியாற்று பாலத்தின் தரைத்தளம் சேதம்
கரூர் அருகே காவிரியாற்று பாலத்தின் தரைத்தளம் சேதம்
கரூர் அருகே காவிரியாற்று பாலத்தின் தரைத்தளம் சேதம்
ADDED : செப் 27, 2025 01:42 AM
கரூர், கரூர்-நாமக்கல் மாவட்டங்களை இணைக்கும் வகையில், காவிரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைத்தளம் சேதம் அடைந்துள்ளது.
கரூர் மாவட்டம், தவிட்டுப்பாளையம், நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில், அமராவதி ஆற்றின் குறுக்கே, பல ஆண்டுகளுக்கு முன், உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. இந்த ஒரு பாலம்தான் பயன்பாட்டில் இருந்தது. இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் பழைய பாலத்தின் அருகே, புதிய பாலம் கட்டப்பட்டது. இதனால் பழைய பாலத்தில் தரைத்தளம் சேதம் அடைந்துள்ளது.
குறிப்பாக, பல இடங்களில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து, நாமக்கல், சேலம் மாவட்டங்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மேலும், பாலத்தின் இருபக்கமும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அதில், பெரும்பாலான மின் விளக்குகள் சரிவர எரிவதில்லை.எனவே, உயர்மட்ட பாலத்தில், சேதமடைந்துள்ள தரைத்தளத்தை சீரமைத்து, அனைத்து விளக்குகளையும் எரிய வைக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியம்.