/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் வெயிலின் தாக்கம் குறைகிறது
/
கரூரில் வெயிலின் தாக்கம் குறைகிறது
ADDED : மே 17, 2025 01:22 AM
கரூர் :கரூர் மாவட்டத்தில், கோடை வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.
கோடைகாலத்தையொட்டி, அக்னி நட்சத்திரம் கடந்த, 4 ல் தொடங்கியது. வரும், 28ல் நிறைவு பெறுகிறது. அதையொட்டி, கரூர் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக க.பரமத்தியில் அதிகபட்சமாக, 104.9 டிகிரி வெயில் சுட்டெரித்தது. வழக்கமாக தென் மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும்
இந்நிலையில், தென்மேற்கு பருவமழை அந்தமான் தீவில் கடந்த, 13ல் முன் கூட்டியே தொடங்கியது. இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால், கோடை வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று க.பரமத்தியில், 99.5 டிகிரியாக வெப்பம் குறைந்தது. கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் அரவக்குறிச்சி, 4 மி.மீ., அணைப்பாளையம், 52, க.பரமத்தி, 13 மி.மீ., மழை பதிவானது.