ADDED : ஜூன் 19, 2024 06:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார்: ப.வேலுார் அருகே, கூடுதுறை காவிரி ஆற்றில் சட்ட விரோதமாக மணல் திருடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ப.வேலுார் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தலைமையிலான போலீசார், கூடுதுறை பகுதியில், நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற டூவீலரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இதில், கூடுதுறையை சேர்ந்த சுப்பிரமணி, 55, சட்டவிரோத மணல் மூட்டைகளை திருடியது தெரியவந்தது. அவரை கைது செய்து மணல் திருட்டிற்கு பயன்படுத்திய டூவீலரை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.