/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
எம்.ஜி.ஆர்., சிலை கரை வேட்டியை டேப் ஒட்டி மறைத்த வருவாய் துறையினர்
/
எம்.ஜி.ஆர்., சிலை கரை வேட்டியை டேப் ஒட்டி மறைத்த வருவாய் துறையினர்
எம்.ஜி.ஆர்., சிலை கரை வேட்டியை டேப் ஒட்டி மறைத்த வருவாய் துறையினர்
எம்.ஜி.ஆர்., சிலை கரை வேட்டியை டேப் ஒட்டி மறைத்த வருவாய் துறையினர்
ADDED : மார் 25, 2024 01:30 AM
கரூர்:லோக்சபா
தேர்தலையொட்டி, நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளதால், கரூரில்
எம்.ஜி.ஆர்., சிலையில் உள்ள கரை வேஷ்டிக்கு, வருவாய் துறை ஊழியர்கள் டேப்
ஒட்டியுள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுவையில் வரும் ஏப், 19 ல்
லோக்சபா தேர்தல் நடக்கிறது. அதற்கான அறிவிப்பு கடந்த, 16 ல்
வெளியானது. அன்று முதல், தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளது.
இதனால், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்த விபரங்களை,
வருவாய் துறை துணிகள் கட்டி மறைத்துள்ளனர். அரசியல் கட்சிகளின் கொடி
கம்பங்களும் அகற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில், கரூர் லைட் ஹவுஸ்
கார்னர் பகுதியில், அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர்கள்
அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின், முழு உருவ வெண்கல
சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில், எம்.ஜி.ஆர்., சிலை வேஷ்டியில்,
கட்சி வர்ணமான கருப்பு, வெள்ளை, சிவப்பு கரை பூசப்பட்டிருந்தது. அதை
வெள்ளை டேப் ஒட்டி, வருவாய் துறை ஊழியர்கள் மறைத்துள்ளனர்.