/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புதிய வணிக வளாக கட்டுமான பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்
/
புதிய வணிக வளாக கட்டுமான பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்
புதிய வணிக வளாக கட்டுமான பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்
புதிய வணிக வளாக கட்டுமான பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்
ADDED : நவ 22, 2024 01:26 AM
புதிய வணிக வளாக கட்டுமான
பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்
கரூர், நவ. 22-
கரூர் மாநகராட்சி காமராஜ் மார்க்கெட்டில், புதிய வணிக வளாக கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதை, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, நேற்று பார்வையிட்டார்.
அப்போது அவர், நிருபர்களிடம் கூறியதாவது:
காமராஜ் மார்க்கெட்டில், 50 ஆண்டுகளாக பழுதடைந்துள்ள கடைகளை புதுப்பித்து தருமாறு வியாபாரிகள் கோரிக்கை வைத்திருந்தனர். அதன்படி, 6.75 கோடி ரூபாய் மதிப்பில், 160 கடைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, 123 கடைகள் கட்டி பணிகள் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள, 37 கடைகள் விரைவில் முடிக்கப்பட்டு, டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து பணிகளும் முடிந்து, ஜனவரி மாதத்தில் திறக்கப்படும். கரூர் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள், நீதிமன்ற வழக்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு வந்தவுடன் இதற்கான பணிகள் தொடங்கப்படும்.
இவ்வாறு கூறினார்.
கலெக்டர் தங்கவேல், மேயர் கவிதா, மாநகராட்சி கமிஷனர் சுதா ஆகியோர் பங்கேற்றனர்.