/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புதிய ரவுண்டானாவில் மின் விளக்குகள் தேவை
/
புதிய ரவுண்டானாவில் மின் விளக்குகள் தேவை
ADDED : செப் 23, 2024 04:39 AM
கரூர்: புதிதாக அமைக்கப்பட்டுள்ள, இரண்டு ரவுண்டானாவில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்-கின்றனர்.
கரூர் மாவட்டம், வெங்ககல்பட்டி, வெள்ளியணை வழியாக, பாளையம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, நாள்-தோறும் பஸ், லாரி, கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் செல்-கின்றன. இதனால், வெங்ககல்பட்டி மற்றும் வெள்ளியணை சாலையில், சில மாதங்களுக்கு முன், விபத்துகளை தவிர்க்கும் வகையில், ரவுண்டானா அமைக்கப்பட்டது. மேலும், அந்த சாலையில், விவசாய நிலங்கள் மற்றும் ஏராளமான வீடுகள் உள்-ளன.இந்நிலையில், இரண்டு ரவுண்டானாவிலும் மின் விளக்கு வசதி இல்லாததால், இரவு நேரங்களில் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே, வெள்ளியணை சாலை மற்றும் வெங்ககல்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள, ரவுண்-டானாவில் மின் விளக்குகள் அமைக்க, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.