/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இடிந்து விழும் நிலையில் நிழற்கூடம்
/
இடிந்து விழும் நிலையில் நிழற்கூடம்
ADDED : செப் 14, 2025 04:58 AM
கரூர்: வேலாயுதம்பாளையம் அருகே, அரசு பள்ளி எதிரே எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் நிழற்கூடம் உள்ளதால், மாணவர்கள், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
வேலாயுதம்பாளையம் அருகே, புகழூரில் அரசு மேல்நிலைப்-பள்ளி உள்ளது. அதில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன், பள்ளி எதிரே மாணவர்கள், பொதுமக்கள் வசதிக்காக பயணிகள் நிழற்கூடம் கட்டப்பட்டது. சேலம்-கரூர் பழைய நெடுஞ்சாலையில் உள்-ளதால், அந்த வழியாக இயக்கப்படும் டவுன் பஸ்கள், நிழற்-கூடம் முன் நின்று செல்கிறது. இந்நிலையில், பல மாதங்களாக நிழற்கூடம் சேதமடைந்த நிலையில் உள்ளது. குறிப்பாக, கான்-கிரீட் கம்பிகள் வெளியே தெரியும் வகையில், கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ள நிழற்கூடத்தை இடித்து விட்டு, புதிதாக நிழற்கூடம் கட்டி தர, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்-கின்றனர்.