ADDED : நவ 19, 2026 06:38 AM

அ நிறம் | அளவு
கரூர்:தமிழ்நாடு
ஓய்வூதியர் பாதுகாப்பு இயக்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மனித
சங்கிலி போராட்டம், தலைமை தபால் நிலையம் முன் நடந்தது.
அதில்,
ஓய்வூதிய குடும்ப பாதுகாப்பு நிதி, 50 ஆயிரம் ரூபாயில் இருந்து, ஒரு
லட்சத்து, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும், மாதாந்திர
மருத்துவபடி, 1,000 ரூபாயாக உயர்த்த வேண்டும், 80 வயது தொடங்கும்
நிலையில், 10 சதவீதம் கூடுதலாக ஓய்வூதியம் வழங்க வேண்டும், எட்டாவது
ஊதிய குழு பயன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட,
பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
போராட்டத்தில்,
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முத்துக்கனி, ஜவஹர், மாவட்ட தலைவர்
மகாவிஷ்ணன், செயலாளர் தங்கவேல், முன்னாள் மாவட்ட தலைவர் சடையாண்டி
உள்பட, பலர் பங்கேற்றனர்.
