/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டி மீட்பு
/
கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டி மீட்பு
ADDED : அக் 21, 2024 07:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி: பள்ளப்பட்டி அருகே, மோகன் நகரை சேர்ந்தவர் மல்லிகா. இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், மல்லிகா வளர்த்து வந்த ஆட்டுக்குட்டி ஒன்று அங்குள்ள, 50 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்தது.
உடனடியாக அரவக்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு மீட்பு பணி நிலைய சிறப்பு நிலைய அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், 50 அடி ஆள கிணற்றில் இறங்கி தவறி விழுந்த ஆட்டுக்குட்டியை உயிருடன் மீட்டனர்.