/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆமை வேகத்தில் நடைபெறும்:கழிவுநீர் சுத்திகரிப்பு மையம்
/
ஆமை வேகத்தில் நடைபெறும்:கழிவுநீர் சுத்திகரிப்பு மையம்
ஆமை வேகத்தில் நடைபெறும்:கழிவுநீர் சுத்திகரிப்பு மையம்
ஆமை வேகத்தில் நடைபெறும்:கழிவுநீர் சுத்திகரிப்பு மையம்
ADDED : அக் 02, 2025 01:28 AM
குளித்தலை:குளித்தலையில் நடைபெறும் கழிவுநீர் சுத்திகரிப்பு மைய பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
குளித்தலை நகராட்சியில், 24 வார்டுகள் உள்ளன. இதில், 1வது வார்டு தெற்கு மணத்தட்டை மற்றும் 2 வார்டு பகுதி தெற்கு தேவதானம், கரூர் - திருச்சி ரயில்வே பாதையின் தென்
பகுதியில் அமைந்துள்ளது. 3 வது வார்டு சங்கிலிராயபுரம், பெரியார் நகர், பரிசல் துறை பகுதிகள் தென்கரை பாசன வாய்க்காலின் வட பகுதியில் அமைந்துள்ளது. மற்ற வார்டுகள் நகரின் மத்தியில் அமைந்துள்ளது.
இந்த 24 வார்டுகளிலும் வடிகாலில் இருந்து வெளியேறும் கழிவுநீர், பம்ப் மூலம் பழைய நகராட்சி குப்பை கிடங்கில் தொட்டி அமைக்கப்பட்டு, அங்கு சுத்திகரிப்பு செய்த பின், தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்துவதற்காக மத்திய அரசு மூலம், 9 கோடியே, 10 லட்சம் மதிப்பில் நிதி உதவியுடன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பணி துவங்கப்பட்டது. தற்போது வரை சிறிய அளவில் தொட்டி அமைத்து, கான்கிரீட் கம்பி அமைக்கும் பணி மட்டுமே நடந்துள்ளது.
எனவே, கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தை விரைந்து முடித்து, தரமான முறையில் பணிகள் நடைபெற வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.