/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அடிப்படை வசதிகள் இல்லாத கலைஞர் நகரால் சிரமப்படும் மக்கள்
/
அடிப்படை வசதிகள் இல்லாத கலைஞர் நகரால் சிரமப்படும் மக்கள்
அடிப்படை வசதிகள் இல்லாத கலைஞர் நகரால் சிரமப்படும் மக்கள்
அடிப்படை வசதிகள் இல்லாத கலைஞர் நகரால் சிரமப்படும் மக்கள்
ADDED : அக் 02, 2025 01:27 AM
கரூர்:கரூர் நகரின் மையப்பகுதியில் உள்ள, கலைஞர் நகரில் மழை பெய்யும் போது, சாக்கடை கழிவு நீருடன், மழை நீரும் தேங்குகிறது. இதனால், அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.கரூர்---திருச்சி சாலை திருமாநிலையூர் கலைஞர் நகரில், 250க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதியில் போதிய வடிகால் வசதி இல்லாததால், மழை பெய்யும் போது, அந்த பகுதியில் மழைநீருடன், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரும் தேங்குகிறது. இதனால், அப்பகுதியில் வசிப்போர் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:ராயனுார் பகுதியில் போதிய சாக்கடை வசதி இல்லாததால், கழிவுநீருடன், மழைக்காலங்களில் மழை நீரும் சேர்ந்து, கலைஞர் நகரில் பல இடங்களில் தேங்குகிறது. இந்த பகுதியில் தார்ச்சாலை இல்லை. மண் சாலையில் தான் வீடுகளுக்கு நடந்து செல்ல வேண்டும். மழைக் காலங்களில் குழந்தைகள், பெரியவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாது. பல ஆண்டுகளாக தார்ச்சாலை போட கோரிக்கை வைத்தும் பயன் இல்லை.
போதிய சாக்கடை கால்வாய் வசதிகள் இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி நிற்கும். இதனால், கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. தேங்கிய நீரில் இருந்து பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் வீடுகளுக்குள் வருகிறது. இதனால், கலைஞர் நகரின் ஒரு பகுதியில் வடிகால் வெட்டி, கழிவுநீர், மழை நீர் திருமாநிலையூரில் உள்ள, சாக்கடை கால்வாய்க்கு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால், கரூர் மாநகராட்சி நிர்வாகம் அதை கண்டு கொள்ளாததால், ஆக்கிரமிப்புகள் அதிகரித்து விட்டது. இதனால், சமீபத்தில் பெய்த மழையின் போது, மழை நீர் மற்றும் கழிவு நீர் குடியிருப்பு பகுதிகளில், பல நாட்களாக தேங்கியது. இதுகுறித்து, மாநகராட்சி அலுவலகத்தில் புகார் செய்தும் பயன் இல்லை.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.