/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டீக்கடைக்காரரின் மகன் நீட் தேர்வில் அசத்தல்
/
டீக்கடைக்காரரின் மகன் நீட் தேர்வில் அசத்தல்
ADDED : ஆக 31, 2024 12:31 AM
குளித்தலை: குளித்தலை அருகே, கள்ளை கிராமத்தை சேர்ந்த ராமசாமி - சிறும்பாயி தம்பதியர் டீக்கடை நடத்தி வருகின்றனர்.
இவர்களது மகன் ஹரிஹரன், கள்ளை யூனியன் நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்தார். கூடலுார் உடையாபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், 2021-22ம் ஆண்டு பிளஸ் 2- தேர்வில் தேர்ச்சி பெற்று, மருத்துவ
படிப்பிற்காக, 'நீட்' தேர்வு எழுதினார்.
போதிய மதிப்பெண் இல்லாததால், மருத்துவர் கனவு நினைவாக-வில்லை. ஹரிஹரனின் அக்கா கனகவள்ளி கூடலுார் உடை-யாப்பட்டி அரசுப்பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இவரின் முயற்சியால், திருச்சி தனியார் நீட்
மையத்தில் படித்து, நீட் தேர்வில் தமிழ் வழி பாடத்திட்டத்தின் கீழ், 7.5 சதவீத இட ஒதுக்-கீட்டின் கீழ், 627 மதிப்பெண்களை பெற்று, மாநில அளவில், 15வது இடமும், மாவட்ட அளவில் இரண்டாவது இடமும் பெற்றார்.
சென்னை அரசு மருத்துவக் கல்லுாரியில் இடம் கிடைத்து, ஹரிஹரன் மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்-துள்ளார்.இது குறித்து மாணவன் ஹரிஹரன் கூறுகையில்,'' என்னுடைய பெற்றோர் டீக்கடை வைத்து தொழில் செய்கின்றனர். அவ்வப்-போது பெற்றோருக்கு உறுதுணையாக இருந்து வந்தேன். எனது அக்கா கனகவள்ளி மற்றும் பள்ளி
ஆசிரியர்கள் கொடுத்த ஊக்-கத்தால், மருத்துவராக வேண்டும் என்ற கனவு நிறைவேறியது. தமிழ் வழி பாடத்திட்டத்தின் கீழ், 7.5 சதவீத இட ஒதுக்-கீட்டின் படி மாநில அளவில், 15 வது இடமும், மாவட்ட அளவில் இரண்டாவது
இடமும் கிடைத்தது. சென்னை அரசு மருத்துவக் கல்லுாரியில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டு, சேர்ந்-துள்ளேன்'' என்றார்.