/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிடப்பில் போடப்பட்ட கோவில் மண்டப பணி; விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு திறக்கப்படுமா?
/
கிடப்பில் போடப்பட்ட கோவில் மண்டப பணி; விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு திறக்கப்படுமா?
கிடப்பில் போடப்பட்ட கோவில் மண்டப பணி; விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு திறக்கப்படுமா?
கிடப்பில் போடப்பட்ட கோவில் மண்டப பணி; விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு திறக்கப்படுமா?
ADDED : டிச 09, 2024 07:02 AM
கரூர்: கரூர் அருகே, புதிதாக கட்டப்பட்டு வந்த திருமண மண்டப பணிகள் கிடப்பில் போடப்பட்டதால், பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
கரூர் மாவட்டம், காதப்பாறை பஞ்., வெண்ணைமலையில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு, பவுர்ணமி, தைப்பூசம், அமாவாசை உள்ளிட்ட விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும், கோவிலுக்கு அருகே, கரூர் பஞ்., யூனியன் அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தொழிலாளர் நல அலுவலகம், மகளிர் பயிற்சி நிலையம் ஆகியவையும் உள்ளன. பல ஆண்டுகளாக, வெண்ணைமலை கோவில் சுற்று வட்டார பகுதிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ள இடத்தில், மண் சாலையாகவே இருந்தது. மழைக்காலங்களில், கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், அரசு அலுவலகங்களுக்கு செல்லும் பொதுமக்கள், மாணவ, மாணவியர் பெரும் அவதிப்பட்டனர்.
இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, கடந்த, 2016-21 அ.தி.மு.க., ஆட்சியின் போது, பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலை சுற்றி தார்ச்சாலை, மழைநீர் வடிகால் வசதி, அம்மா பூங்கா மற்றும் பக்தர்கள் வசதிக்காக திருமண மண்டபம் ஆகியவை, ஒரு கோடி ரூபாய் செலவில் பணிகளை, அப்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். அ.தி.மு.க., ஆட்சியின் போதே, தார்ச்சாலை அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவடைந்தன. அம்மா பூங்கா பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது. ஆனால், பக்தர்கள் வசதிக்காக கட்டப்பட்டு வந்த திருமண மண்டப பணிகள் கிடப்பில் உள்ளது. இதனால், வெண்ணைமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
வரும் தை மாதம், தைப்பூச திருவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில், திருமண மண்டப பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விட, கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.