/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தலைமை நுாலகத்தில்கழிப்பறை துர்நாற்றம்
/
தலைமை நுாலகத்தில்கழிப்பறை துர்நாற்றம்
ADDED : மே 04, 2025 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை:குளித்தலை, காவிரி நகர் உழவர் சந்தை பகுதியில் தலைமை நுாலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நுாலகத்தில் தினமும், 100க்கும் மேற்பட்டோர் மற்றும் அரசு போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவியர் 150க்கும் மேற்பட்டோர்கள் வந்து படித்து செல்கின்றனர். நுாலக வளாகத்தில் அமைந்துள்ள பொது கழிப்பிடம், சரிவர பராமரிக்கப்படாமல் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், இங்கு வரும் மாணவ, மாணவியர் பாதிக்கப்படுகின்றனர்.
வாசகர்கள், போட்டி தேர்வு பயிலும் மாணவ, மாணவியர் நலன் கருதி, கழிப்பிடத்தில் துாய்மை பணி மேற்கொள்ள வேண்டும்.