/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கொட்டிய தொடர் மழையால் குளங்கள் நிரம்பின: தரைப்பாலத்தை தாண்டி செல்லும் நீர்
/
கொட்டிய தொடர் மழையால் குளங்கள் நிரம்பின: தரைப்பாலத்தை தாண்டி செல்லும் நீர்
கொட்டிய தொடர் மழையால் குளங்கள் நிரம்பின: தரைப்பாலத்தை தாண்டி செல்லும் நீர்
கொட்டிய தொடர் மழையால் குளங்கள் நிரம்பின: தரைப்பாலத்தை தாண்டி செல்லும் நீர்
ADDED : டிச 14, 2024 12:57 AM
குளித்தலை, டிச. 14-
தோகைமலை யூனியன் பகுதிகளில் கடந்த இரு நாட்களில் பெய்த மழையால், குளங்கள் நிரம்பி வருகின்றன.
குளித்தலை அடுத்த, தோகைமலை யூனியன் பகுதிகளில் கடந்த, 3ம் தேதி அன்று ஒரே நாளில் பெய்த கனமழையால் பில்லுார், கல்லடை குளங்கள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வந்தது. பின், ஒரு வாரமாக மழை இல்லாமல் இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரண்டு நாட்கள் சாரல் மழை தொடங்கியது. இது தோகைமலை யூனியன், 20 பஞ்.,களில் தொடர்ந்து, 48 மணி நேரத்தை கடந்து இடைவிடாது பெய்தது. அவ்வப்போது ஆங்காங்கே கன மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த மழைக்கு பில்லுார் பெரிய ஏரி இரண்டாவது முறையாக நிரம்பி, ஏரியின் வடிகால் வழியாக உபரி நீர் வெளியேற தொடங்கியது. இதனால், பில்லுார் பஞ்., முன்னாள் தலைவர் ராகவன் தலைமையில், பொதுமக்கள் அருகில் உள்ள பட்டத்தளச்சியம்மன், பில்லுார் மாரியம்மன் சுவாமிகளை வழிபட்டு விவசாயம் செழிக்க மழை நீரை மலர் துாவி வரவேற்றனர்.
இதேபோல் கல்லடை குளமும் இரண்டாவது முறையாக நிரம்பியதால், அதன் வடிகால் வழியாக மழைநீர் வெளியேறி வருகிறது. கல்லடை குளத்தில் வெளியேறும் மழை நீர், மேலவெளியூர் வழியாக செல்லும் ஆற்றுவாரியில் புத்துார் குளத்திற்கு கரை
புரண்டு ஓடுகிறது. பாதிரிபட்டி குளம் முழு கொள்ளளவை எட்டிய நிலையில், உபரிநீர் வெளியேறி வருகிறது.
இதேபோல், தோகைமலையில் உள்ள மந்தை குளம் நிரம்பி, அதன் உபரிநீர் வடிகால் வழியாக வெளியேறுகிறது. கடந்த இரு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழைக்கு, வடசேரி பெரிய ஏரி, புத்துார் குளம், புழுதேரி, கூடலுார் ஆகிய குளங்கள் நிரம்பி வருகிறது. வடசேரி பஞ்., பாலசமுத்திரப்பட்டி தென்கிழக்கு திசையில் உள்ள குடியிருப்புகளை வெள்ள நீர் சுற்றியுள்ளது. மேலும் பாலசமுத்திரப்பட்டி வழியாக வடசோரி பெரிய ஏரி செல்லும் ஆற்றுவாரியில் இருகரைகளையும் புரட்டிபோடும் அளவிற்கு வெள்ளநீர் சென்றதோடு, பாலசமுத்திரப்பட்டி திருச்சி சாலையில் உள்ள தரைமட்ட பாலத்தில், 5 அடிக்கு மேல் மழைநீர் சென்று வருவதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
பள்ளிப்பட்டி கிழக்கு பகுதியில் பில்லுார் ரோட்டில் உள்ள தரைமட்ட பாலம், பில்லுார் பாதிரிப்பட்டி சாலையில் இருந்து சின்னப்பில்லுார் செல்லும் மெட்டல் ரோட்டில் உள்ள தரைமட்ட பாலம், முத்தக்கவுண்டம்பட்டி செல்லும் தரைமட்ட பாலங்களில் வெள்ள நீர், 4 அடிக்கு மேல் செல்வதால் போக்கு வரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
வெள்ள நீர் செல்வதை பொதுமக்கள் வேடிக்கை பார்த்து சென்றனர். மேலும், வடசேரி பஞ்.,காவல்காரன்பட்டி தென்றல் நகர் பகுதியில் ஆனந்த-தேவிகா தம்பதியின் ஓட்டு வீட்டின் மண்சுவர் இடிந்து வெளி பகுதியில் விழுந்தது. இதனால் உயிர் சேதம் ஏற்படவில்லை. பஞ்., தலைவர் சரவணன், சேதம் குறித்து விசாரித்து வருகிறார்.
தோகைமலை யூனியன் குழு தலைவர் சுகந்தி
சசிகுமார், யூனியன் கமிஷனர் ராஜேந்திரன் உள்பட அனைத்து பஞ்., தலைவர்களும் மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

