/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புதர் மண்டி கிடக்கும் வெள்ளாளப்பட்டி குளம்
/
புதர் மண்டி கிடக்கும் வெள்ளாளப்பட்டி குளம்
ADDED : ஜூலை 31, 2025 01:51 AM
கரூர், வெள்ளாளப்பட்டி குளம் புதர்மண்டி கிடப்பதால், சட்ட விரோதமான செயல்களின் புகலிடமாக மாறி வருகிறது.புலியூர் டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட வெள்ளாளப்பட்டி குளம், 7 ஏக்கர் பரப்பளவு கொண்டது. மழை காலங்களில் வரும் நீர், குளத்தில் சேமிக்கப்படுகிறது. மேலும் பல கிராமங்களில் உள்ள, விவசாய கிணறுகளுக்கு நீர்மட்டம் உயர்ந்து வந்தது. இதனால் விவசாயிகள் பயன்பெற்று வந்தனர்.
இந்நிலையில், குளத்தில் அதிகமான முள் செடிகள் வளர்ந்து வருவதால், மழை காலங்களில் பெய்யும் மழை நீர் முழுமையாக சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முள் செடிகள் இருப்பதால் நீர் மட்டம் குறைகிறது. வறட்சி ஏற்படும் நிலை உள்ளது. முள் புதர்கள் மண்டி கிடப்பதால் குடிப்பவர்களின் கூடாரமாக மாறிவிட்டது.
மது அருந்திய பாட்டில் மற்றும் சாப்பிட்ட பொருட்களை அங்கேயே துாக்கி வீசுவதால் குளத்தில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாத இந்த குளத்தில், வளர்ந்து வரும் முள் செடிகளை அகற்றி, துார் வார டவுன் பஞ்சாயத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.