ADDED : ஏப் 30, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி:
அரவக்குறிச்சியில், நெடுஞ்சாலைத்துறைக்குட்பட்ட பகுதிகளில், சாலை அருகே படர்ந்துள்ள முட்செடிகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.
அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட பகுதிகளில், கடந்த மழை காலத்தில் சாலை அருகே உள்ள செடிகள் படர்ந்ததால், வாகன ஓட்டிகள் அவதியுற்றனர். இந்நிலையில், சாலை ஓரத்தில் வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்றும் பணி, அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, அரவக்குறிச்சி நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ள, பள்ளப்பட்டியில் இருந்து ஈசநத்தம் செல்லும் சாலையில், முட்செடிகளை அகற்றும் பணி நேற்று துவங்கியது, இப்பணியை, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அழகர்சாமி ஆய்வு செய்தார்.

