ADDED : நவ 21, 2025 02:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மல்லசமுத்திரம், பீஹார் மாநிலம், கெளவாஹன் பகுதியை சேர்ந்தவர்கள் பில்ட்டு மஞ்சிஹி, 28, சோபியா, 23; தம்பதியினர். இவர்கள் மல்லசமுத்திரம் அருகே, மொஞ்சனுார் கிராமம், அரசம்பாளையம் பகுதியில் உள்ள, கோழிப்பண்ணை
யில் கடந்த எட்டு மாதங்களாக கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு, 12;00மணிக்கு பில்ட்டு மஞ்சிஹி மதுபோதையில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். பின் அருகிலிருந்த வேப்பமரத்தில் துாக்கில் தொங்கி இறந்தார். இந்த தம்பதியினருக்கு 5, 3, 2 வயதுகளில் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.

