sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பகவதி அம்மன் கோவிலில் தீமிதி விழா

/

பகவதி அம்மன் கோவிலில் தீமிதி விழா

பகவதி அம்மன் கோவிலில் தீமிதி விழா

பகவதி அம்மன் கோவிலில் தீமிதி விழா


ADDED : மே 19, 2025 01:49 AM

Google News

ADDED : மே 19, 2025 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த தோகைமலையில் உள்ள குறிஞ்சி நகரில் பகவதி அம்மன் கோவிலும், வெள்ளப்பட்டியில் மகா மாரி-யம்மன் கோவிலும் அமைந்துள்ளது.

இக்கோவில்களில், அக்னி நட்சத்திரத்தையொட்டி, ஆண்டு-தோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, குறிஞ்சி-நகர் பகவதி அம்மன், மகா மாரியம்மன் கோவில் திருவிழா தொடங்கியது. குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து, தீர்த்தக்-குடம் எடுத்த பக்தர்கள், தோகைமலை குறிஞ்சி நகரில் உள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றனர். பின், வெள்ளப்பட்டி மகா மாரியம்மன், பகவதி அம்மன் கோவிலில் சிறப்பு அபி-ஷேகம் நடந்தது.தொடர்ந்து, பகவதி அம்மன் கோவிலில் இருந்து தீர்த்தக்குடம், பால்குடம்,

தீச்சட்டி, பால் காவடி, பறவை காவடி, சிலா போடுதல், கரும்பு தொட்டில் எடுத்து, பக்தர்கள் முக்கிய வீதி வழியாக சென்று மீண்டும் கோவிலை அடைந்தனர். பின், அங்கு அமைக்-கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன்

செலுத்தினர்.

இதில், தோகைமலை, தெலுங்குபட்டி, நாகனுார், கழுகூர், கல்-லடை, கூடலுார், பாதிரிபட்டி, வடசேரி பஞ்., பகுதியை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us