ADDED : ஆக 03, 2026 06:20 AM
அ நிறம் | அளவு
கரூர்:கரூர்
- ஈசநத்தம் சாலை, ராயனுார் தில்லை நகரில், டாஸ்மாக் மதுபான கடை
செயல்படுகிறது. நேற்று மதியம், 12:00 மணிக்கு மதுபான கடையை ஊழியர்கள்
திறக்க சென்றபோது, சுவர் துளையிட்டு இருந்தது.
மேலும், கடையில்
இருந்த, 12,000 ரூபாய் மதிப்புடைய மதுபான பெட்டி மற்றும் சில்லரை
நாணயங்களை காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து, தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.
