/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வீட்டு கதவை உடைத்து 5 பவுன் நகை திருட்டு
/
வீட்டு கதவை உடைத்து 5 பவுன் நகை திருட்டு
ADDED : ஜூலை 10, 2024 06:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: சின்னதாராபுரம் அருகே, வீட்டு கதவை உடைத்து மர்ம நபர்கள் தங்க நகைகளை திருடி சென்றனர்.கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் ஸ்ரீ ரங்க கவுண்டனுார் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார், 50; இவர் கடந்த மே மாதம், 16ல் வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்துடன் திருப்பூருக்கு சென்று விட்டார்.
பிறகு, நேற்று முன்தினம் இரவு விஜயகுமார் வீட்டுக்கு சென்ற போது, பின் பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் வைக்கப்பட்டிருந்த, ஐந்து பவுன் தங்க நகைளை காணவில்லை. இதுகுறித்து, விஜயகுமார் போலீசில் புகார் செய்தார். சின்னதாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.