/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3.50 லட்சம் திருட்டு
/
வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3.50 லட்சம் திருட்டு
ADDED : மார் 20, 2024 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்:கரூர்
மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த செக்கணம் கிராமத்தை சேர்ந்தவர்
ஆரியன், 50, விவசாயி மற்றும் பூக்கள் விற்பனை செய்து வருகிறார்.
இவர்
புதிதாக விவசாய நிலம் அருகில் வீடு கட்டி வருகிறார். இதற்காக பழைய
வீட்டு பீரோவில், மூன்று லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை வைத்து விட்டு
வெளியூர் சென்றுள்ளார். நேற்று முன்தினம் மர்ம நபர்கள் மூன்று பேர்
வந்து, வீட்டில் உள்ள பூட்டை உடைத்து பீரோவில் இருந்த பணத்தை திருடி
சென்றதாக தகவல் கிடைத்தது. இது குறித்து, மாயனுார் போலீசில் ஆரியன்
புகார் அளித்தார். போலீசார் சந்தேக நபர்களிடம் விசாரித்து
வருகின்றனர்.

