sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூரில் 20 நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லை லாரி தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் அவலம்

/

கரூரில் 20 நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லை லாரி தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் அவலம்

கரூரில் 20 நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லை லாரி தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் அவலம்

கரூரில் 20 நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லை லாரி தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் அவலம்


ADDED : டிச 25, 2024 02:00 AM

Google News

ADDED : டிச 25, 2024 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூரில் 20 நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லை

லாரி தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் அவலம்

கரூர், டிச. 25-

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, 15 வார்டு மக்கள் பயன்பெறும் பகுதியில், 20 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. டேங்கர் லாரி மூலம் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் அவல நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

கரூர் மாநகராட்சி பகுதி, 48 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள, 2.14 லட்சம் பேருக்கு, தினமும், 290.74 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.

காவிரி ஆற்றில் நெரூர், வாங்கல், கட்டளை ஆகிய பகுதி நீரேற்று நிலையத்தில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த, இரண்டு வாரத்திற்கு முன் காவிரி ஆற்றில் உள்ள கட்டளை நீரேற்று நிலைய குழாய் அடித்து செல்லப்பட்டதால், குடிநீர் வினியோகம் முற்றிலும் தடைப்பட்டுள்ளது. இதனால், டேங்கர் லாரி மூலம் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

மாநகராட்சி, 14வது வார்டு கவுன்சிலர் சுரேஷ் (அ.தி.மு.க.,) கூறியதாவது: கரூர் மாநகராட்சியில் இணைக்கப்பட்ட தான்தோன்றிமலை நகராட்சி, சணப்பிரட்டி பஞ்., ஆகிய பகுதிகளுக்கு, கட்டளை நீரேற்று நிலையத்தில் இருந்துதான் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. நீரேற்று நிலையம் நீரால் சூழப்பட்டுள்ளதால், மின்சாரம் பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், குடிநீர் குழாய் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது.

இதனால், 15 வார்டுகளில் உள்ள, 18,000 குடியிருப்புகளில் குடிநீர் வினியோகம் முற்றிலும் தடைப்பட்டுள்ளது. கடந்த, 20 நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்த ஆண்டு மட்டும் மூன்றாவது முறையாக, கட்டளையில் குடிநீர் குழாய் அடித்து செல்லப்பட்டுள்ளது.

ஒவ்வொரு முறையும் சரிசெய்ய, 20 முதல், 30 லட்சம் ரூபாய் செலவு செய்யப்படுகிறது. இதற்கு, நிரந்தர தீர்வாக, நெரூர் நீரேற்று நிலையம் போல பாலம் அமைத்து குழாய் கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற அரசு மறுக்கிறது. இவ்வாறு, அவர், தெரிவித்தார்.

இது குறித்து, பா.ஜ., தேசிய மொழி பிரிவு மாவட்ட தலைவர் குப்புராவ் கூறியதாவது: தான்தோன்றிமலை நகராட்சி, சணப்பிரட்டி பஞ்., ஆகிய மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதி களில் எப்போதும், 10 முதல், 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போதைய நிலைமை பற்றி கேட்கவே வேண்டாம். நிலத்தடி நீர் மட்டம் அதலபாதாளத்துக்கு சென்று விட்டதால், வீடுகளில் உள்ள போர்வெல்களில் தண்ணீர் கிடைப்பது அரிது. ஆகையால், டேங்கர் லாரி மூலம் தண்ணீர் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதில், 5,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்கர் லாரி மூலம் சப்ளை செய்யும் குடிநீர், 2,000 ரூபாய், மற்ற பயன்பாட்டுக்குரிய தண்ணீர், 1,800 ரூபாய்க்கு விற்கின்றனர். இவர்

களுக்கு மட்டும் எங்கிருந்து தான் தண்ணீர் கிடைக்குமோ தெரியவில்லை. போன் செய்த உடனே தண்ணீரைக் கொண்டு வந்து விடுகின்றனர். வீடுகளில் அத்தியா

வசிய தேவைக்கு கூட தண்ணீரை டேங்கர் லாரிகள் மூலம் விலைக்கு வாங்கி பயன்படுத்தும் அவலநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதை பயன்படுத்தி தண்ணீர் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து கரூர் மாநகராட்சி செயற்பொறியாளர் மோகனிடம் கேட்ட போது, ''தற்போது கட்டளை நீரேற்று நிலையத்தில் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. எப்போது, பணி முடியும் என்பதை, கூறுவது கடினமாகும். இருப்பினும், பணிகளை விரைந்து முடித்து குடிநீர் வினியோகம் செய்யப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us