/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பாதாள சாக்கடை கழிவுநீர் வடிகால் வாய்க்காலில் திறந்து விட்டதால் அச்சம்

ADDED : நவ 10, 2024 03:16 AM
கரூர்: கரூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள, பாதாள சாக்கடை கழிவுநீர் மழைநீர் வடிகால் வாய்க்காலில் திறந்து விட்டதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கரூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள, 48 வார்டுகளில், 1 முதல், 32வது வார்டு வரை பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. அதில், 14 ஆயிரம் பாதாள சாக்கடை இணைப்புகள் உள்ளன. கரூர் வாங்கல் சாலையில் ராஜாஜி சாலை, ரத்தினம் சாலை, அண்ணா வளைவு, கோவை சாலை ஆகிய இடங்களில், பலமுறை பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. பல மாதங்கள் போராடி, புதிய குழாய்கள் போடப்பட்டு பள்ளம் சரி செய்யப்பட்டு மூடப்-பட்டது.இந்நிலையில், கரூர் ரயில்வே ஸ்டேஷன் பகுதி வாழைத்தார் மண்டி அருகில், பாதாள சாக்கடை தொட்டியில் இருந்து, சாலை-யோரம் உள்ள மழை நீர் வடிகால் வரை குழாய் பதிக்கப்பட்டுள்-ளது. இந்த குழாய் வழியாக, பாதாள சாக்கடை கழிவு நீரை வெளியேற்றி வருகின்றனர். தற்போது சாக்கடை நிரம்பியதால், சாலையில் கழிவுநீர் தேங்கி நின்று அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. இந்த கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.