/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தவிட்டுப்பாளையம் உயர்மட்ட பாலத்தில் மின் விளக்கு இல்லாததால் கும்மிருட்டு
/
தவிட்டுப்பாளையம் உயர்மட்ட பாலத்தில் மின் விளக்கு இல்லாததால் கும்மிருட்டு
தவிட்டுப்பாளையம் உயர்மட்ட பாலத்தில் மின் விளக்கு இல்லாததால் கும்மிருட்டு
தவிட்டுப்பாளையம் உயர்மட்ட பாலத்தில் மின் விளக்கு இல்லாததால் கும்மிருட்டு
ADDED : மே 07, 2024 07:23 AM
கரூர் : கரூர் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் புதிய தவிட்டுப்பாளையம் உயர்மட்ட மேம்பாலத்தில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலை, தவிட்டுப்பாளையம், மண்மங்கலம், செம்மடை, பெரிச்சுபாளையம், பெரிய ஆண்டாங்கோவில் பிரிவு, கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில் கோடங்கிப்பட்டி பிரிவு, வீரராக்கியம் பிரிவு பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு, பலர் உயிரிழந்துள்ளனர். இதனால், அப்பகுதிகளில் மேம்பாலம் அல்லது குகை வழிப்பாதை அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் பலமுறை சாலை மறியல் போராட்டங்களை நடத்தினர்.
இந்நிலையில் கடந்த, 2019 இறுதியில், மத்திய சாலை போக்குவரத்து துறை சார்பில், அ.தி.மு.க., ஆட்சியின் போது, கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பெரிச்சுபாளையம், பெரிய ஆண்டாங்கோவில் பிரிவு, செம்மடை பிரிவு, தவிட்டுப்பாளையம் பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டு, தற்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது. அதில், தவிட்டுப்பாளையம் உயர்மட்ட பாலம் மற்றும் குகைவழிப்பாதையில் மின் விளக்குகள் அமைக்கப்படவில்லை.
இதனால், இரவு நேரத்தில் தவிட்டுப்பாளையம் மற்றும் குகை வழிப்பாதையில் இருட்டில் செல்ல பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர்.தவிட்டுப்பாளையத்தில் புதிய உயர்மட்ட பாலங்கள் கட்டும் போதே, மின் விளக்குகள் அமைக்க கீழ்பகுதியில், கான்கிரீட் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை மின் விளக்குகள் அமைக்கப்படவில்லை.மேலும், அந்த பகுதியில் வழிப்பறி அபாயம் உள்ளதால், தவிட்டுப்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள, உயர்மட்ட பாலம் மற்றும் குகை வழிப்பாதையில் மின் விளக்குகள் அமைக்க, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.