/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வெள்ளியணை சாலையில் மின்விளக்கு வசதி இல்லை
/
வெள்ளியணை சாலையில் மின்விளக்கு வசதி இல்லை
ADDED : பிப் 26, 2024 07:03 AM
கரூர் : கரூர்-, வெள்ளியணை சாலையில் மின் விளக்குகள் இல்லாததால், வழிப்பறி சம்பவங்கள் நடப்பதாக புகார் எழுந்துள்ளது.
கரூர் நகரில் இருந்து வெள்ளியணைக்கு, தான்தோன்றிமலை, வெங்ககல்பட்டி பிரிவு வழியாக சாலை செல்கிறது. அந்த வழியில் மணவாடி, அய்யம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமப்புறங்களின் பிரிவு சாலைகள் உள்ளன. மேலும், கரூர்--திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே, வெங்ககல்பட்டியில் பாலம் கட்டப்பட்டுள்ளது. அதன் வழியாக, திண்டுக்கல் மாவட்டத்துக்கு செல்ல, வெள்ளியணை சாலையை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், போதுமான தெரு விளக்குகள் இல்லை. இதனால், வழிப்பறி உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடக்கிறது. எனவே, கரூர்- வெள்ளியணை சாலையில், தேவையான இடங்களில் மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

