/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வெ.மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
/
வெ.மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
வெ.மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
வெ.மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED : பிப் 10, 2025 07:09 AM
கரூர்: வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
கரூர் மாவட்டம், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா, கடந்த, 2ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து கட்டளைதாரர்களின் மண்டகபடி பூஜை நடந்து வருகிறது. நேற்று காலை, 11:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
அதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நாளை அதிகாலை முதல், தைப்பூச திருவிழாவையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், மஹா தீபாராதனை, அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. பக்தர்கள் வசதிக்காக தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு, விழா ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை மாலை, 4:00 மணிக்கு தைப்பூச திருவிழாவையொட்டி தேரோட்டம் நடக்கிறது. அதை தொடர்ந்து, கொடி இறக்கம், விடையாத்தி நிகழ்ச்சியுடன், தைப்பூச திருவிழா நிறைவடைகிறது.