/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பள்ளியில் திருவள்ளுவர் சிலை ஆண்டு விழா கொண்டாட்டம்
/
பள்ளியில் திருவள்ளுவர் சிலை ஆண்டு விழா கொண்டாட்டம்
பள்ளியில் திருவள்ளுவர் சிலை ஆண்டு விழா கொண்டாட்டம்
பள்ளியில் திருவள்ளுவர் சிலை ஆண்டு விழா கொண்டாட்டம்
ADDED : டிச 24, 2024 02:16 AM
கரூர், டிச. 24-
தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியம், கவுண்டம்பாளையம் தொடக்கப் பள்ளியில், கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை திறந்து, 25ம் ஆண்டு விழாவை முன்னிட்டு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் இளமதி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கரூர் டி.எஸ்.பி., செல்வராஜ், வட அமெரிக்க வாழ் தமிழர் கார்த்திகா பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டு, திருவள்ளுவரின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செய்தனர். பின், திருக்குறள் நெறிகளை பின்பற்ற வேண்டி, மாணவ, மாணவியர் உள்பட அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
நிகழ்ச்சியில், பள்ளி மேலாண்மைக்குழு துணைத்தலைவர் பூங்கோதை, புலியூர் டவுன் பஞ்., கவுன்சிலர் தங்கமணி, பள்ளி தலைமை ஆசிரியர் பரணிதரன் உள்பட பலர் பங்கேற்றனர்.