/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தான்தோன்றிமலையில் முள் செடிகள் விஷ ஜந்துக்கள் நடமாட்டத்தால் அச்சம்
/
தான்தோன்றிமலையில் முள் செடிகள் விஷ ஜந்துக்கள் நடமாட்டத்தால் அச்சம்
தான்தோன்றிமலையில் முள் செடிகள் விஷ ஜந்துக்கள் நடமாட்டத்தால் அச்சம்
தான்தோன்றிமலையில் முள் செடிகள் விஷ ஜந்துக்கள் நடமாட்டத்தால் அச்சம்
ADDED : ஜன 17, 2025 01:09 AM
கரூர்,:கருர் மாநகராட்சிக்குட்பட்ட தான்தோன்றிமலை பகுதியில் சீத்த முள்செடிகளின் ஆக்கிரமிப்பு காரணமாக விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? என எதிர்பார்க்கப்
படுகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தான்தோன்றிமலை, வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. இந்த பகுதியில்தான் மாவட்ட கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம் உட்பட அனைத்து முக்கிய அலுவலகங்களும் உள்ளன. இப்பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. அதே
சமயம் அதிகளவு சீமை கருவேல முள்செடிகள் வளர்ந்து, பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நிலத்தடி நீர்மட்டத்தை வெகுவாக பாதிக்கும் என்பதால், கருவேல முட்செடிகளை அகற்ற தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என, கோரிக்கை விடப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், சில இடங்களில் அகற்றப்பட்டது. தற்போது அதிகளவு முள்செடிகள் வளர்ந்துள்ளது. இதனால், விஷ ஜந்துகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம், ஆபத்தான முட்செடிகளை அகற்ற தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.