/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
போதை மாத்திரை விற்பனை மூன்று பேருக்கு காப்பு
/
போதை மாத்திரை விற்பனை மூன்று பேருக்கு காப்பு
ADDED : நவ 28, 2024 01:07 AM
போதை மாத்திரை விற்பனை
மூன்று பேருக்கு காப்பு
கரூர், நவ. 28-
கரூரில், சட்ட விரோதமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்த, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். கரூர் பகுதியில் போதை மாத்திரைகளை, மர்ம நபர்கள் விற்பனை செய்வதாக, கரூர் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போதை கும்பலை கண்டுபிடிக்க, டவுன் போலீசார் சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். ஆண்டாங்கோவில் எல்.ஆர்.ஜி. நகரை சேர்ந்த விஷால், 21, ஆண்டாங்கோவில் ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்த அருண், 22 மற்றும் 18 வயது சிறுவனிடம் போலீசார், தீவிர விசாரணை நடத்தினர். அவர்களிடமிருந்து, 100 எண்ணிக்கையில், டைடோல் வலி நிவாரணி மாத்திரை, 300 கிராம் போதை பொருள் மற்றும் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவர்களை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.