ADDED : ஜூன் 22, 2025 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, குளித்தலை அடுத்த நெய்தலுார், முதலைப்பட்டி, சேப்பலாபட்டி, நச்சலுார் பகுதிகளில், லாட்டரி டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின்படி, நங்கவரம் எஸ்.ஐ., ராஜேந்திரன் தலைமையிலான போலீசார், நெய்தலுார் காலனி கடைவீதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது முதலைப்பட்டியை சேர்ந்த முருகானந்தம், 31, பெரியபனையூர் ஏழுமலை, 53, சேப்லாபட்டி ராமசாமி, 45, ஆகிய மூன்று பேரும் துண்டு சீட்டில் நம்பர் எழுதப்பட்ட லாட்டரியை, பொதுமக்களுக்கு விற்பனை செய்து கொண்டிருந்தனர்.இவர்களிடமிருந்து மூன்று மொபைல்போன், 4,670 ரூபாய் மற்றும் 11 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான டிக்கெட்களை பறிமுதல் செய்தனர். பின், மூவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.