/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
லாட்டரி டிக்கெட் விற்ற மூன்று பேர் கைது
/
லாட்டரி டிக்கெட் விற்ற மூன்று பேர் கைது
ADDED : நவ 07, 2025 12:37 AM
குளித்தலை குளித்தலை அடுத்த சிந்தாமணிப்பட்டி பகுதியில், வெளி மாநில லாட்டரி டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக டி.எஸ்.பி., செந்தில்குமாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நேற்று முன்தினம் மைலம்பட்டி கடைவீதியில் சிந்தாமணிப்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மைலம்பட்டி மாப்பிள்ளை மைதின், 48, கமருதீன், 58, ஆகியோர் அசாம் மாநில லாட்டரி டிக்கெட்டுகளை மக்களுக்கு விற்பனை செய்தனர். இதையடுத்து அவரிடம் இருந்து லாட்டரி டிக்கெட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல், குருணி குளத்துப்பட்டி கடை வீதியில் முஜீப் ரகுமான், 50, என்பவர் வெளிமாநில லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்தார். இவரையும் போலீசார் கைது செய்தனர்.

