ADDED : நவ 07, 2025 12:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி அருகே உள்ள கொத்தப்பாளையம் கிராமத்தில், அமராவதி ஆற்றங்கரையில் அருள் பாலித்து வரும் திருதோணிபுரீஸ்வரர் கோவிலில், ஐப்பசி மாத பவுர்ணமி நாளை முன்னிட்டு, அன்னாபிஷேக பெருவிழா நடைபெற்றது.
இதில், சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்து அழகிய அலங்காரத்துடன், விஸ்வரூப தரிசனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் திரளானோர் வழிபாடு செய்தனர்.

